26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
குற்றம்

வவுனியாவில் 20 வயது திருடன் கைது!

வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, குருமன்காடு நகரசபை விடுதியில் உள்ள வீடு ஒன்றில் அண்மையில் 3 பவுண் நகை திருடப்பட்டிருந்தது. அத்துடன் வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலும் 2 பவுண் நகை திருடப்பட்டிருந்தது.

வீடு புகுந்து இடம்பெற்ற இத் திருட்டு சம்பவங்கள் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.ஏ.ஏ.எஸ்.ஜயக்கொடியின் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் கியான் தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட்டுகளான (37348) திஸாநாயக்க, (61461) திலீப், (36099) விக்கிரமசூரிய, பொலிஸ் கொன்ஸ்தாபிள் (91792) தயாளன் உள்ளடங்கிய குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனைடிப்படையில் குறித்த இரு திருட்டு சம்பவம் தொடர்பில் வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த இளைஞரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ராகமவில் கொடூர கொலை

east tamil

குடும்பத் தகராறின் காரணமாக மனைவி கொடூர கொலை!

east tamil

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

east tamil

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

Leave a Comment