27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

இன்று முதல் ஒன்லைனில் புகையிரத பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்யலாம்!

பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் இன்று முதல் ஒன்லைனில் புகையிரத பயணச்சீட்டுகளை வழங்க இலங்கை புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர, பயணிகள் இணையத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய முடியும் அல்லது கையடக்க தொலைபேசி செயலி ஊடாக ஆசனத்தை முன்பதிவு செய்ய முடியும் என தெரிவித்தார்.

இந்த மொபைல் அப்ளிகேஷன் விரைவில் பதிவிறக்கம் செய்யப்படும் என்று ஜெயசுந்தர கூறினார்.

இந்த வேலைத்திட்டம் ஆரம்ப கட்டமாக இன்று முன்னெடுக்கப்படும் எனவும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப எதிர்காலத்தில் இந்த வசதி கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சேவையை சீரமைக்க ஆரம்ப கட்டத்தில் தரவுகளை சேகரிப்போம் என்றார்.

மொபைல் அப்ளிகேஷன்களின் android மற்றும் iOS பதிப்புகள் விரைவில் கிடைக்கும் என்றும், பயணிகள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தியும் பணம் செலுத்த முடியும் என்றும் ஜெயசுந்தர கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

GovPay ஆரம்பம்

east tamil

கிளிநொச்சியில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டோர் சேவை நிலையங்களுக்கான கள விஜயம்

east tamil

A9 வீதியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

east tamil

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி

Pagetamil

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

Leave a Comment