26.3 C
Jaffna
December 30, 2024
Pagetamil
இலங்கை

நல்லிணக்கத்தை உருவாக்க ஜனாதிபதி கோட்டா சரியாகவே செயற்பட்டு வருகிறார்; யாழ் அரச அதிபரே குழப்புகிறார்: வலி.மேற்கு தவிசாளர் ‘பகீர்’ கருத்து!

நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்தவும், அனைவரும் சமமாக மதிக்கப்பட்டு உண்மையான நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச செயற்பட்டு வருகின்றார். அதற்கான திட்டங்களை வெற்றிகரமாகவும் முன்னெடுத்து வருகிறார்.

ஆனால், யாழ் மாவட்ட அரச அதிபர் க.மகேசன் அதற்கு எதிராக செயற்படுகிறார். அவர் மாவட்ட அரச அதிபர் பதவியில் இருக்கும்வரை எமது பிரதேசத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த யாழ் மாவட்ட மக்களுக்கும் நியாயமான அவிருத்திகளோ அன்றி தீர்வுகளோ கிடைக்கப்போவதில்லை என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட அரச அதிபர் அரசியல் வாதியின் ஒருவரின் நிகழ்ச்சி நிரலுக்கு எடுபடாது தான் ஓர் அரசாங்கத்தின் பொறுப்பு மிக்க உயரதிகாரி என்ற நிலைப்பாட்டுடன் மக்களுக்கான சேவையை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செயற்பட முடியாவிடின் முன்னைய அரச அதிபரைப் போன்று பதவியிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (15) நடைபெற்றது. இதன்போது பிரதேசத்தின் பல்வேறு விடயங்கள தொடர்பில் சபையில் விவாதிக்கப்பட்டன.

இந்நிலையில் சபையின் உறுப்பினர் ஒருவரால், தற்போது ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் மக்களின் நலன்களை முன்நிறுத்தியதான கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கென தலா 3 மில்லியன் நிதி ஒதுக்கீடு மற்றும் வட்டாரங்களுக்காக தலா 4 மில்லியன் நிதி ஒதுக்கீடு ஆகியன ஒதுக்கீடு செய்யப்பட்டு குறித்த திட்டம் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் கடந்த 3 ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த திட்டடத்தை மக்களுக்கு பாரபட்சமின்றி மக்களின் தெரிவாக முன்னெடுக்க்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நிகழ்வக்கு பிரதேச சபை உறுப்பினர்களான தங்களை அழைக்கவில்லை என்றும் அதை நடைமுறைப்படுத்த யாழ் மாவட்ட ஒருங்கிணைப்ப குழு ஊடாக ஒரு பட்டியல் அனுப்பப்பட்டு முன்னெடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியதுடன் எமது அயலிலுள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் அனைத்து கட்சியின் பிரதிநிதிகளுக்கும் சம கௌரவம் கொடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டும் உள்ளது. அந்தவகையில் யாழ் மாவட்டத்தில் இவ்வாறு மக்கள் பிரதிநிதிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளமை எவ்வகையில் நியாயமானது என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் போதே தவிசாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்றும் நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இவ்வாறான பல நடைமுறைகளை முன்னெடுத்து வருகின்றார்.

அத்துடன் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் அந்த அரசாங்கம் சரியாகவே செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் யாழ் மாவட்டத்தில் மட்டும் இவ்வாறான புறக்கணிப்புகள் நடைபெற்றுள்ளன.

இதற்கு மாவட்டத்தின் அரச அதிபரே பொறுப்புக் கூறவேண்டும். ஆனால் அவர் ஒரு அரசியல் தரப்பின் பின்னணியில் இருந்து செயற்படுவதால் அந்த அரசியல் தரப்பினரது முடிவுகளையே மக்களிடம் அரசாங்க அதிகாரிகளூடாக திணிக்கப்படுகின்றது.
இதனால் உண்மையாக தீர்க்கப்பட வேண்டிய மக்களின் தேவைப்பாடுகள் புறக்கணிக்கப்பட்டு ஒரு சிலரின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அவை நடைமுறைப்படுத்தப்படும் நிலை காணப்படுகின்றது.

அதனால்தான குறித்த நிகழ்வுக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் அழைக்கப்படாது புணக்கணிக்கப்பட்டனரே தவிர மாற்றுக்காரணம் இருப்பதாக தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

இதேவேளை சபையின் உறுப்பினர்கள் பலர் எமது அயல் மாவட்டமான கிளிநொச்சியில் அனைத்து உறப்பினர்களும் ஒருங்கிணைப்பு குழு தலைவரான டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்பில் கட்சி பேதமின்றி அழைக்கப்பட்டதாக அம்மாவட்ட உறுப்பினர்கள் தமக்கு தெரிவித்ததாக சுட்டிக்காட்டியிருந்தனர்.

அத்துடன் யாழ் மாவட்டத்தில் குறித்த தரப்பினர் ஒருங்கிணைப்பு குழு அதிகாரத்தை கொண்டு இவ்வாறு பல மக்கள் நலத் திட்டங்களை தமது நலத் திட்டங்களாக செயற்படுத்தும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாதென்று வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் உறப்பினர்களின் ஆதங்கங்களையும் கோரிக்கைகளையும் கருத்திற்கொண்ட தவிசாளர் இவற்றை கட்டப்படுத்தும் அதிகாரம் மாவட்ட அரச அதிபருக்கே உரியது என்றும் அவர் அவ்வாறு செயற்பட போவதில்லை என்ற காரணத்தால் எமது பிரதேசத்தின் மக்களின் அவசிய தேவைப்பாடுகள் எவையும் மேற்கொள்ளப்படாத நிலையே காணப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் கூறியதுடன் இவை தொடர்பில் ஜனாதிபதி கோட்டடபய ராஜபக்சவுக்கு கடிதமெதான்றை எழுதி அதற்கான தீர்வை கோர நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்ததுடன் இந்த செயற்பாட்டை அனைத்து உறுப்பினர்களின் முழுமையான ஆதரவுடன் கண்டனமாக நிறைவேற்றுவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புதிய இராணுவத்தளபதி நியமனம்!

Pagetamil

புதிய கடற்படை தளபதி நியமனம்

Pagetamil

யாழில் போராட்டம்

Pagetamil

இணைய மிரட்டல் சம்பவம் இரு மாணவர்கள் கைது

east tamil

“தனியார் வகுப்புகள் இல்லாமல் சிறந்த கல்வி பெற இயலும்” – ஜோசப் ஸ்டாலின் கருத்து

east tamil

Leave a Comment