இலங்கை அணியின் இந்திய சுற்றுப்பயணம் குறித்த திருத்தப்பட்ட திகதிகள் மற்றும் இடங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கையணி 3 ரி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.
இரண்டு அணிகளிற்குமிடையிலாள முதலாவது ரி20 போட்டி, பெப்ரவரி 24 அன்று லக்னோவில் நடக்கும். மற்ற இரண்டு போட்டிகள் பெப்ரவரி 26 மற்றும் 27 அன்று தர்மசாலாவில் நடைபெறுகின்றன.
இதைத் தொடர்ந்து மார்ச் 4 முதல் மொஹாலியில் முதல் டெஸ்ட் நடைபெறும். மார்ச் 12 ஆம் திகதி பெங்களூரில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியுடன் முடிவடைகிறது.
இரண்டு டெஸ்ட் போட்டிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது சுற்றின் ஒரு பகுதியாக இருக்கும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1