முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை மேற்கொண்டமைக்காக விளக்கமறியலில் இருந்து நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்ட கிரானைச் சேர்ந்த குருசுமுத்து விமலசேன (68) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
எதிர்வரும் 27ஆம் திகதி வாழைச்சேனை பொலிஸ் நிலையம் சென்று தமது வழமையான கையொப்பதினை இட இருந்த நிலையில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை உயிழந்தவரின் இறுதிக் கிரியைகள் அன்னரின் இல்லத்தில் நடைபெற்று இன்று காலை கிரான் கிறிஸ்த்தவ சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த மே 18.-2021ல் மட்டக்களப்பு கிரான் நாகவத்தையில் உள்ள கடற்கரை காணியொன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை மேற்கொண்டமைக்காக இவரது மகன் உட்பட 10 பேர்கள் கல்குடா பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர்கள் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தின் கட்டளைப்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் இவர்களது விடுதலை கோரி பொது அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட கடும் முயற்சியின் காரணமாக கடந்த 08.12.2022 ஆம் திகதி விடுதலை பெற்றனர்.
தமிழ் தேசியத்துடன் பற்றுறுதியுடன் பயணித்தமைக்காக பல்வேறு பொது அமைப்புக்கள் தங்களது கண்ணீர் அஞ்சலியினை தெரிவித்து வருகின்றனர்.
-ருத்திரன்-