26.1 C
Jaffna
December 20, 2024
Pagetamil
விளையாட்டு

ஐபிஎல் ஏலம்: 2ஆம் நாளில் இளம்வீரர்களிற்கு கிராக்கி; இலங்கையின் துஷ்மந்த, தீக்‌ஷன விலை போயினர்!

2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் இரண்டாவது நாளாக பெங்களூருவில் இன்று தொடங்கியது. இன்று பல வீரர்கள் ஏலம் போகவில்லை. இங்கிலாந்து கப்டன் இயான் மோர்கன், அவுஸ்திரேலியா கப்டன் ஆரோன் பின்ச், இந்திய வீரர் புஜாரா போன்றோர்களை வாங்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. அதேநேரம் இளம்வீரர்களை ஒவ்வொரு அணியும் வாங்கி குவித்தனர்.

வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதை டெல்லி அணி ரூ. 5.25 கோடிக்கு வாங்கியது. லக்னோ அணி இலங்கையின் துஸ்மந்த சமீராவை ரூ.2 கோடிக்கு எடுத்தது. கடந்த சீசனில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய இளம் வீரர் சேத்தன் சகாரியா இந்த முறை ரூ. 4.20 கோடிக்கு டெல்லி அணிக்கு செல்கிறார். சந்தீப் சர்மா பஞ்சாப் அணியால் ரூ.50 லட்சத்துக்கு மீண்டும் தக்கவைக்கப்பட்டார். ராஜஸ்தான் அணி நவ்தீப் சைனியை ரூ.2.6 கோடிக்கு வாங்கியது. ஜெயதேவ் உனட்கட் ரூ.1.3 கோடிக்கு மும்பை வசம் சென்றார்.

சுழற்பந்துவீச்சாளார்களில் மயங்க் மார்கண்டேவை ரூ.65 லட்சத்துக்கு மும்பை ஏலம் எடுத்தது. லக்னோ ஷாபாஸ் நதீமை 50 லட்ச ரூபாய்க்கு வசப்படுத்தியது. சென்னை அணி இலங்கையின் மிஸ்டரி ஸ்பின்னர் மகேஷ் தீக்சனவை ரூ.70 லட்சத்துக்கு கைப்பற்றியது.

மேலும் ரிங்கு சிங்கை கொல்கத்தா ரூ.55 லட்சத்துக்கும், லக்னோ மனன் வோராவை ரூ.20 லட்சத்துக்கும் ஏலம் எடுத்தன. சர்வதேச போட்டிகளில் விளையாடாத இளம் சகலதுறை வீரர்களில் மூன்றுபேரை தொடர்ச்சியாக டெல்லி அணி வாங்கியது. லலித் யாதவ் – ரூ.65 லட்சம், ரிபல் யாதவ் ரூ.20 லட்சம், U19 இந்திய அணியின் கப்டன் யஷ் துல் – ரூ.50 லட்சம் கொடுத்து வாங்கியது டெல்லி.

திலக் வர்மாவை மும்பை அணி ரூ.1.7 கோடிக்கும், மஹிபால் லோமரோரை பெங்களூரு ரூ.95 லட்சத்துக்கும், அங்குல் ராய் ரூ.20 லட்சத்துக்கு கொல்கத்தா அணியாலும் வாங்கப்பட்டனர். சஞ்சய் யாதவ்வை மும்பை அணி ரூ.50 லட்சம் கொடுத்து எடுத்தது. U19 உலகக்கோப்பை வெல்ல முக்கிய நபராக விளங்கிய ராஜ் பாவாவை வாங்க போட்டி நிலவியது. ரூ.2 கோடிக்கு அவர் பஞ்சாப் வசம் சென்றார். U19 உலகக்கோப்பையில் இந்திய அணி சார்பில் ஓப்பனிங் இறங்கிய ராஜ்வர்தன் ஹங்கர்கேகரை சென்னை அணி ரூ.1.5 கோடிக்கு எடுத்தது. குஜராத் யாஷ் தயாளை ரூ.3.2 கோடிக்கு வாங்கியது. சிமர்ஜீத் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு பஞ்சாப் வாங்கியது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!

Pagetamil

வெற்றியுடன் டிம் சவுதிக்கு பிரியாவிடை கொடுத்த நியூசிலாந்து!

Pagetamil

அனைத்துப் பல்கலைக்கழக மேசைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஆண், பெண் பிரிவுகளில் மொரட்டுவ, ஜே’புர அணிகள் சம்பியன்!

Pagetamil

அவுஸ்திரேலியா 445 ஓட்டங்கள்: திண்டாடும் இந்தியா!

Pagetamil

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

Leave a Comment