நேற்று இலங்கையில் கோவிட்-19க்கு எதிராக 47,763 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நேற்று 403 நபர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டதாகவும், 738 நபர்கள் இரண்டாவது சினோபார்ம் டோஸை பெற்றதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
1,026 நபர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் கொடுக்கப்பட்டது. 1,713 நபர்கள் இரண்டாவது ஃபைசர் டோஸ் பெற்றுள்ளனர்.
மேலும், நேற்று 43,883 பேர் ஃபைசர் பூஸ்டர் டோஸ் பெற்றுள்ளனர்.
அதன்படி, நாட்டில் இதுவரை 5,942,255 ஃபைசர் பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பபட்டுள்ளன.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் இலங்கையில் COVID-19 க்கு எதிராக 36,770,764 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1