ஜனாதிபதியின் வருகையை அடுத்து மன்னார் வீதியின் பல பகுதிகளிலும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்பட்ட அவசர புனரமைப்பு நடவடிக்கையால் வீதியில் காணப்பட்ட பல குழிகள் காணாமல் போயுள்ளன.
வவுனியா, மன்னார் வீதியில் உள்ள பம்பைமடுப் பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்திற்கு நாளை (10) விஜயம் செய்யவுள்ளார்.
இதனையடுத்து வவுனியாவில் இருந்து மன்னார் வீதி ஊடாக பல்கலைக் கழகம் செல்லும் வரை உள்ள பகுதியில் வீதி புனரமைப்பின் போது நீண்ட நாட்களாக திருத்தப்படாது விடப்பட்டிருந்த பகுதிகள் மழைக்கு மத்தியிலும் அவசர அவசரமாக திருத்தப்பட்டு வீதிகளில் குழிகளின்றி மட்டப்படுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில் மன்னார் – வவுனியா வீதி புனரமைப்பின் போது முழுமை பெறாது காணப்பட்ட 7 இடங்கள் அவசர அவசரமாக புனரமைக்கப்பட்டுள்ளதுடன், வீதியில் தற்போது அசௌகரியமின்றி மக்கள் பயணம் செய்யப் கூடியதாகவும் உள்ளது.


