இலங்கையில் எண்ணெய் வளத்தை ஆராய்வதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மன்னார் படுகை தொடர்பில் விஞ்ஞான ரீதியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் அமைச்சர் கம்மன்பில தெரிவித்தார்.
ஆரம்ப மதிப்பீட்டின் அடிப்படையில், மன்னார் படுகையிலிருந்து சுமார் இரண்டு பில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய்கள் மற்றும் சுமார் ஒன்பது டிரில்லியன் சதுர அடி இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெயைக் கண்டுபிடிக்க முடியும் என்று நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எண்ணெய் ஆய்வுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் உள்ளன என்றார்.
இவ்விடயம் தொடர்பாக இந்தியாவுடன் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் மார்ச் மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொண்டு தனது முன்மொழிவுகளை முன்வைத்து தனியார் முதலீட்டாளர்களை இலங்கைக்கு விஜயம் செய்து நாட்டிலுள்ள எண்ணெய் வளங்களை ஆராயுமாறு அழைப்பு விடுக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.