27.4 C
Jaffna
December 15, 2024
Pagetamil
கிழக்கு

16 வயது காதலால் விபரீதம்: நேற்று இரவு சிறுமி உயிரை மாய்ப்பு; இன்று காலை தந்தை உயிரை மாய்ப்பு!

16 வயது சிறுமி ஒருவர் நஞ்சு அருந்தி நேற்று (08) மாலையில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டிருந்த நிலையில், சிறுமியின் தந்தையார் இன்று (09) காலையில் வீட்டின் கூரையில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

களுவங்கேணி முதலாம் பிரிவு அக்கரைவீதியைச் சேர்ந்த 16 வயதுடைய கிருஸ்ணகுமார் கிருஸ்திகா, அவருடைய தந்தையான 53 வயதுடைய முத்து கிருஸ்ணகுமார் ஆகியோரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

கிருஸ்திகா ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வருவதாகவும் இளைஞன் ஒருவரை அவர் காதலித்துவரும் நிலையில் சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று மாலை வீட்டில் நஞ்சு அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து சிறுமி உயிரை மாய்த்தமைக்கு காரணம் தந்தையே என  அயலவர்கள் பேசத் தொடங்கியதையடுத்து சிறுமியின் தந்தையார் இன்று காலையில் வீட்டின் அறையின் உள்ள கூரையில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-செங்கலடி நிருபர்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சல்லி கோயில் ஆக்கிரமிப்பு

east tamil

கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

east tamil

செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்

east tamil

பெண்களுக்கு அரச அச்சுறுத்தல் – பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள்

east tamil

காரைதீவு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 8வது நபரின் சடலமும் மீட்பு!

Pagetamil

Leave a Comment