பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்க கோரி இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் அணியால் வடக்கு கிழக்கு சகல மாவட்டங்களிலும் மேற்கொள்ளவுள்ள கையெழுத்துக்களை சேகரிக்கும் போராட்டத்திற்கு சகல மக்களும் இனமத வேறுபாடுகள் இன்றி ஆதரவு வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது்தொடர்பாக மேலும் கூறுகையில்,
சர்வதேச சமூகம் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இந்த கொடிய சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளன.
ஆனால் இலங்கை அரசானது அதனை முழுமையாக நீக்கும் மன நிலையில் இல்லை. சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் நிலையில் அந்த சட்டத்தை அப்படியே வைத்து சில சரத்துக்களை மட்டும் மாற்றி அமைத்து மேலும் மக்களை துன்புறுத்தும் சட்டமாக இதனை தொடர திட்டமிட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
உண்மையில் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை பாராளுமன்றில் மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நீதி அமைச்சர் கே.டபிள்யூ.தேவநாயகம் அவர்களால் கடந்த 1979 யூலை 19ஆம் திகதி மதிய போசன இடைவெளியின் பின்னர் அன்று பி.ப.01 மணிக்கு சமர்பிக்கப்பட்டு அன்று இரவு 10.45 மணிக்கு நிறைவேற்றப்பட்டது.
எதிர்கட்சி தலைவராக தமிழர் விடுதலை கூட்டணி 18 ஆசனங்களுடன் அப்பாபிள்ளை அமர்தலிங்கம் இருந்தபோதும் எதிர்த்து கருத்துகளை முன்வைத்து வாக்கெடுப்பில் இருந்து விலகினர்,
தமிழர் விடுதலை கூட்டணி முதல் செய்த துரோகமாக பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து வாக்களிக்கவில்லை என எதிர்கட்சி தலைவர் அ.அமிர்தலிங்கம் மீது அப்போது பலராலும் குற்றம் சாட்டப்பட்டது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கும் வரை 1979 யூலை 19 அந்த சட்டம் சமர்பித்து சரியாக 7 மாதங்களால் 1980 பெப்ரவரியில் தேவநாயகம் வசம் இருந்த நீதி அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு உள்ளூராட்சி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்ற உண்மை பலருக்கும் தெரியாது.
தமிழரை கொண்டு தமிழரை வதைக்கும் சட்டமாக நிறைவேறிய இந்த சட்டத்தால் கூடிய பாதிப்புக்களையும் வதைகளையும் எதிர்நோக்கியவர்கள் தமிழர்களாகவே காணப்பட்டது.
தற்போது அந்த சட்டத்தால் நாட்டில் உள்ள அனைத்து இன்மக்களும் பாதிப்படைகிறார்கள் என்பதை ஓரளவு புரிந்து கொள்ளலாம்.
ஜீ.எஸ்.பீ,வரிச்சலுகையை இலங்கைக்கு தொடர்ந்து வழங்க வேண்டுமானால் பயங்கரவாத்தடைச்சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு நிபந்தனை விதித்துள்ள நிலையில் அதனை்நீக்காமல் வெள்ளையடிக்கும் செயலில் தற்போது செயல்பாடுகளை அவதானிக்க முடிகிறது.
இவ்வாறான நிலையில் இதனை முழுமையாக நீக்க வேண்டும் என்பது தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 2004ஆம் ஆண்டு்தொடக்கம் வலியுறுத்தி்சர்வதேசத்திலும் அழுத்தம் கொடுத்து வந்ததை நாம் அறிவோம்.
எவ்வாறான அழுத்தங்களை கொடுத்த போதும் பயங்கரவாத தடைச்சட்டத்தால் இன்னும் எமது்தமிழ் அரசியல் கைதிகள் பலர் சிறைகளில் வதைபட்டு வாழ்கின்றனர், பல இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர், பல பொது்நுகழவுகள் நினைவு நிகழ்வுகளை இந்த்சட்டத்தால் நடத்தமுடியாமல் உள்ளது.
இவைகளை எல்லாம் கருத்தில் கொண்டு தற்போது இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் அணியால் முன்எடுக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரும் கையொப்பம் சேகரிக்கும் போராட்டத்தில் அனைத்து மக்களும் அந்தந்த மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் அணியால் மேற்கொள்ளப்படும் கையைப்பங்கள் பெறும் போராட்டத்தில் தமது கையொப்பங்களை பதிந்து பூரண ஆதரவு வழங்குமாறு மேலும் கூறினார்.