கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான சிறுமியொருவரை காணவில்லையென பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கம்பளை நில்லம்பே பகுதியை சேர்ந்த யோகராஜா கலைவாணி என்ற மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
அவர் தனது அத்தையின் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் தந்தை கதிர்வேல் யோகராஜா கண்டி பொதுச்சந்தையில் பணிபுரிகிறார். அவர் பணிக்கு சென்ற பின்னர், தாய் பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன்னால், அவர்களின் மூன்று குழந்தைகளும் அருகில் வசிக்கும் சிறுமியின் தந்தையின் சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
இரண்டு குடும்பத்தின் பிள்ளைகளும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்த போது சிறுமியை படிக்குமாறு அத்தை அறிவுரை கூறியதாகவும் தெரியவந்துள்ளது.
பின்னர் நேற்று முன்தினம் (7) மாலை பிள்ளைகள் டி.வி பார்த்துக் கொண்டிருந்த போது சிறுமியை காணவில்லை என்பது தெரிய வந்து, தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
கிராம மக்கள் ஒன்று திரண்டு சுற்றுவட்டார வீடுகளிலும், வனப்பகுதிகளிலும் தேடியும் சிறுமியை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
பொலிசார் மோப்ப நாய்களை கொண்டு அப்பகுதியில் சோதனை நடத்திய போதிலும் நேற்று (8) வரை சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.