26 C
Jaffna
January 3, 2025
Pagetamil
சினிமா

யாஷிகா கன்னியா?: அவரே சொன்ன பதில்!

கன்னித்தன்மை குறித்த இன்ஸ்டாகிராம் ரசிகரின் கேள்விக்கு யாஷிகா அதிரடி பதிலடி கொடுத்துள்ளார்..

தமிழில் ‘கவலை வேண்டாம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். கவுதம் கார்த்திக் நடிப்பில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் தனது கவர்ச்சி நடிப்பின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். பின்னர் தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கவனம் ஈர்த்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் யாஷிகா ஒரு பயங்கர விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் படுத்த படுக்கை ஆனார். ஆஸ்பத்திரியில் பல மாத சிகிச்சைக்கு பின்னர் தற்போது பழைய நிலைமைக்கு வந்துகொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட ஒரு டி.வி. நிகழ்ச்சியில் தோன்றி தான் நலமாக இருப்பதாகவும், வேகமாக மீண்டு வருவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

அதேவேளை சமூக வலைதளங்களில் யாஷிகா ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்தார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது ஒரு ரசிகர், ‘நீங்கள் கன்னித்தன்மையுடன் உள்ளீர்களா?’ என எடக்கு மடக்கான கேள்வி கேட்டார். இதற்கு சற்றும் தாமதிக்காமல், ‘இல்லை, நான் யாஷிகா’ என பதிலடி கொடுத்துள்ளார் யாஷிகா.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

12 ஆண்டு பிரச்சினை தீர்ந்து வெளியாகிறது மதகஜராஜா

Pagetamil

பொங்கல் ரேஸில் இருந்து விலகியது ‘விடாமுயற்சி’

Pagetamil

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை

Pagetamil

சல்மான் கான் மீது காதல்: நினைவு கூர்கிறார் சுஷ்மிதா சென்

Pagetamil

‘சூர்யா 44’ பட டைட்டில் டீசர் டிச.25இல் ரிலீஸ்

Pagetamil

Leave a Comment