7 கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார சேவையில் உள்ள பல தொழிற்சங்கங்கள் காலை 7 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.
காலை 7 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதன் காரணமாக அரச வைத்தியசாலைகளின் பல பணிகள் முடங்கும் என அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஒன்றியத்தின் செயலாளர் தர்மகீர்த்தி எபசிங்க, வேலை நிறுத்தத்தினால் ஆய்வக பணிகள், பரிசோதனை, மருந்து விநியோகம், சிகிச்சை பரிசோதனைகள் உட்பட பல பணிகள் பாதிக்கப்படும்.
எனவே, வைத்தியசாலைகளுக்குச் செல்லும் போது இன்றைய நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஒன்றியம் பொதுமக்களுக்கு தெரிவிக்கின்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1