கொடிகாமத்தில் சிவில் உடையில் துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றச்சாட்டில் 5 விசேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிரடிப்படையின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பொதுமகன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணி, இயற்றாலை பகுதியில் சட்டவிரோதமாக மதுபான உற்பத்தியில் ஈடுபடும் இடமொன்றை நேற்று (6) இரவு 10.30 மணியளவில் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்த போது, துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், சம்பவத்தின் போது 5 விசேட அதிரடிப்படையினரும் சிவில் உடையில் இருந்தனர்.
அதிரடிப்படையினர் கைத்துப்பாக்கியால் சுட்டத்தில் சம்பவ இடத்திலிருந்த ஒருவரின் கையில் காயம் ஏற்பட்டது. அது பாரதூரமான காயமல்ல, ஒரு விரலில் காயமேற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச்சூட்டை நடத்திய குற்றச்சாட்டில் பருத்தித்துறை முகாமைச் சேர்ந்த 5 விசேட அதிரடிப்படையினர், கொடிகாமம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.