27.5 C
Jaffna
December 22, 2024
Pagetamil
இலங்கை

மன்னாரில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு-விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அருகில் இன்று திங்கட்கிழமை (7) காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான கே.பாஸ்கரன் (33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் தனது வீட்டில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை விடத்தல் தீவு கிராமத்திற்குச் சென்று விட்டு மீண்டும் தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இந்த நிலையிலே குறித்த குடும்பஸ்தர் இன்று திங்கட்கிழமை காலை குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்திற்கு அருகில் இருந்து அவர் பயணித்த மோட்டார் சைக்கிலும் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் பொலிஸார் விபத்தா அல்லது கொலையா என்பது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை

Pagetamil

பிரித்தானியர் ஒருவரால் வந்த வினை: இலங்கையில் பேராபத்தாக உருவெடுத்துள்ள ஆபிரிக்க நத்தைகள்!

Pagetamil

2025 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்களின் விபரம்!

Pagetamil

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படையின் மருத்துவ கப்பல்

east tamil

தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிப்பா?: வல்வெட்டித்துறை மக்கள் போராட்டம்!

Pagetamil

Leave a Comment