Pagetamil
மலையகம்

மலையக அரசியல் அரங்கத்தில் மாற்றம்

மலையக அரசியல் அரங்கம் முன்னெடுத்த நுவரெலிய மாவட்ட பிரதேச செயலக கையெழுத்து இயக்கச் செயற்பாடுகளை அடுத்து இடம்பெற்ற உள்ளகக் கூட்டத்தில், பிரதான அமைப்பாளராக இருந்து ஒழுங்கமைப்புகளைச் செய்த இராமன் செந்தூரன் அரங்கத்தின் தேசிய அமைப்பாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

மலையக அரசியல் அரங்கத்தின் மாதாந்த உள்ளகக் கூட்டம் மெய்நிகர் முறையில் 2/2/2022 புதன் மாலை அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம் திலகராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இதுவரைகாலம் பிரதான அமைப்பாளராக செயற்பட்ட இராமன் செந்தூரனின் பணிகளைப் பாராட்டி அரங்கத்தின் தேசிய அமைப்பாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ‘தேயிலை எம் தேசம்’ குழுவினர் மலையக அரசியல் அரங்கத்தின் அங்கத்துவ அமைப்பாகவும் உள்வாங்கப்பட்டு அதன் தலைவர் பெரியண்ணன் ரவி அரங்கத்தின் பிரதான அமைப்பாளர் பதவிக்கும் நியமனம் பெற்றார். பிரதேச சபை உறுப்பினர்களான யோகா ஜெகநாதன், குழந்தைவேல் சுரேஷ்குமார் ஆகியோர் அரங்கத்தின் உயர் அரசியல் பீட உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்பட்டதுடன் சிவில் சமூகங்களையும் அரச ஊழியர்களையும் அரங்கத்துடன் இணைத்துச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொறுப்பு இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மலையக அரசியல் அரங்கத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் அது குறித்து விரிவான அறிக்கையை ஊடகச்சந்திப்பின் ஊடாக தலைமை ஒருங்கணைபலபாளரினால் இரண்டொரு தினங்களில் வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

எல்ல ரயில் டிக்கெட் மாபியாவை சேர்ந்த ஒருவர் கைது!

Pagetamil

ஹட்டனில் கரப்பான்பூச்சி சோறு

Pagetamil

மஸ்கெலியாவில் இறந்த நிலையில் புலியின் உடல் மீட்பு

east tamil

கண்டி-மஹியங்கனை வீதி: போக்குவரத்து தடை

east tamil

நானுஓயாவில் குடும்ப தகராறு – ஒருவர் பலி

east tamil

Leave a Comment