24.7 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இலங்கை

பெற்றோல் குண்டுத் தாக்குதல்… கல்வீச்சு… இந்திய மீனவர்களை காப்பாற்றிய கடற்படை: பருத்தித்துறை கடலில் நடந்த பரபரப்பு சம்பவம்! (VIDEO)

பருத்தித்துறை கடலில் இந்திய இழுவை மீன்பிடி படகை உள்ளூர் மீனவர்கள் கைப்பற்றினர்.

நேற்று (31) இரவு வடமராட்சி, பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப்படகு ஒன்று கைப்பற்றப்பட்டது.

நேற்று நடந்த சம்பவம் பற்றி யாழ்மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் உபதலைவர் வர்ணகுலசிங்கம் தமிழ் பக்கத்திடம் கருத்து தெரிவிக்கையில்-

‘பருத்தித்துறை,கொட்டடியை சேர்ந்த மீனவர் ஒருவர் நேற்று கடலில் வலைவீசிவிட்டு, படகில் காத்திருந்த போது, இந்திய இழுவைப்படகு ஒன்று அங்கு நுழைந்தது. தனது வலைகளை இந்திய படகு அறுத்து விடும் என பயந்த மீனவர், வலையில் லைற்றை பொருத்தி விட்டு, அந்த பகுதிக்குள் வர வேண்டாமென சொல்வதற்காக இந்திய இழுவைப்படகை நெருங்கிச் சென்றார்.

அந்த படகை நோக்கி இந்திய படகில் இருந்தவர்கள் கல் வீசி, பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் காயமடைந்த மீனவர், உடனடியாக தொலைபேசி மூலம் மீனவர் சங்கத்திற்கு அறிவித்தார். உடனடியாக  அவரை மீட்க கரையிலிருந்து பல படகுகள் சென்றன. அந்த படகுகளில் சென்றவர்கள், இந்திய இழுவை படகை சுற்றிவளைத்து கைப்பற்றினர்.

இதன்போது இலங்கை கடற்படை தலையிட்டு இந்திய மீனவர்களை காப்பாற்றியது. எமது மீனவர்களை காப்பாற்ற வேண்டிய கடற்படை இந்திய மீனவர்களைத்தான் காப்பாற்றுகிறது’ என்றார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
4

இதையும் படியுங்கள்

இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி

east tamil

நீதித்துறையில் இருந்து ஓய்வுபெற்றார் நீதிபதி இளம்செழியன் அவர்கள்

east tamil

நாடகப் பேராளுமையான கலாநிதி குழந்தை. ம. சண்முகலிங்கன் காலமானார்

east tamil

வில்பத்து தேசிய பூங்காவிற்கு செல்ல தடை

east tamil

மன்னார் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு – வழி நடத்தியவர் வெளிநாட்டில்!

east tamil

Leave a Comment