கிளிநொச்சி இராமநாதபுரம் 6ம் யூனிற் பகுதியில் இன்று (30) எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது.
காலை சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது திடீர் என அடுப்பில் வெடிப்புச் சத்தம் கேட்டதை அடுத்து வீட்டில் இருந்த அனைவரும் அச்சத்தில் வெளியேறியுள்ளனர்.
சிறிது நேரத்தின் பின்னர் வீட்டினுள் சென்று எரிவாயு அடுப்பின் ரெகுலேட்டரை அகற்றிய பின் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறி இருந்தாக வீட்டார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு சம்பவம் தொடர்பாக தெரிவாத்ததையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் அடுப்பு வெடிப்புக்கச் சம்பவம் தொடர்பாக பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1