இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது.
யாழிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் இன்று (31) மாலை இந் சந்திப்பு இடம்பெற்றது.
மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், சீ.வீ.கே.சிவஞானம், சி.சிறிதரன் ஆகியோர் கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொண்டிருந்தனர்.
பயங்கரவாத தடைச்சட்டம், தமிழ் அரசியல் கைதிகள், ஐ.நா மனித உரிமைகள் பேரவை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இதில் கலந்துரையாடப்பட்டது.
சுமார் 1 மணித்தியாலம் இந்த சந்திப்பு நடந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1