26 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

இம்முறை ஐ.நா அறிக்கை கடுமையாக இருக்கும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இம்முறை கடுமையானதாக இருக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருடனான இன்றைய சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் விடயங்கள் உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் பேசியுள்ளோம். 13ஆம் திருத்தத்தை ஏற்றுக் கொள்கின்ற தமிழ்க் கட்சிகளின் நடவடிக்கை சம்பந்தமாகவும் தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக நேர்மாறாக நடைபெறுகின்ற விடயம் தொடர்பில் பேசியுள்ளோம்

இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும்போது இலங்கை கடற்படை அதனை தடுக்காமல் அசண்டையீனமாக செயல்படுவது தொடர்பாகவும் தமிழ் தேசிய அரசியலில் ஈடுபாடு கொண்ட பெண்களுக்கு வரும் மோசமான பழி வாங்கல் சம்பந்தமாகவும் தெரிவித்துள்ளோம்.

தென்னிலங்கை சூழல் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் உரிமைமீறல் சார்ந்த விடயங்கள் தொடர்பாகவும் அவருக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.அமைதியாக அனைத்தையும் உள்வாங்கிய அம்மையாரிடம் கடந்த அறிக்கை சம்பந்தமாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தோம்.

அரசாங்கம் புதிதாக ஆட்சிக்கு வந்ததால் அவர்களுக்கு சந்தர்ப்பம் ஒன்று வழங்க வேண்டும் என சொல்லியிருந்தார்.
ஆனால் இந்த முறை அறிக்கை கடுமையானதாக இருக்கும் என கூறியிருந்தார் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

இனவாத வெறியாட்டத்துக்கு நிறுத்தம்: வன்முறையாளர்களுக்கு சிறைத்தண்டனை எச்சரிக்கை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

east tamil

கோமாரியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மாற்றுத் திறனாளிஉயிரிழப்பு

east tamil

மதவாச்சியில் பெண் ஒருவரின் சடலம் காயங்களுடன் மீட்பு

east tamil

மருதங்கேணி LB Finance ஊழல் சம்பவம் தொடர்பாக ஊழியர்கள் மீது அழுத்தம்!

east tamil

ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

east tamil

Leave a Comment