தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு சமஷ்டி அடிப்படையிலான இறுதித் தீர்வை வலியுறுத்தியும், அதற்கு இடைப்பட்ட காலத்தில், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் கூடிய 13வது திருத்தத்தையும் வலியுறுத்தி பிரதான தமிழ் கட்சிகள் 6 கையெழுத்திட்டு இந்திய பிரதமருக்கு அனுப்பிய கடிதத்திற்கு எதிராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மேற்கொள்ளும் பேரணி தற்போது ஆரம்பிக்கும் நிலையில் உள்ளது.
நல்லூர் ஆலய வளாகத்தில் உள்ள தியாகதீபன் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில் கட்சிக்காரர்கள் குழுமியுள்ளனர்.
சவப்பெட்டி ஊர்தியும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வடக்கில் உள்ள 5 மாவட்டங்கள் (யாழ்ப்பாணத்தின் பல பகுதிகள்), கிழக்கு மாகாணத்திற்கு பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து ஆட்களை ஏற்றிவர அனுப்பப்பட்ட சுமார் 10 பேருந்துகள் இதுவரை நல்லூரடியை வந்தடைந்துள்ளது.
மேலும் சில பேருந்துகளிற்காக ஏற்பாட்டாளர்கள் காத்துள்ளனர்.
இதுவரை சுமார் 300 இற்குட்பட்டளவிலானவர்களே அங்கு கூடியுள்ளனர்.