25.5 C
Jaffna
December 24, 2024
Pagetamil
இந்தியா

பெகாசஸ் மென்பொருளை இந்தியா வாங்கியது: அமெரிக்க நாளிதழ் செய்தியால் மீண்டும் சர்ச்சை!

கடந்த 2017 ஆம் ஆண்டில் இஸ்ரேலிடம் இருந்து பெகாசஸ் உளவு மென்பொருளை இந்திய அரசு வாங்கியதாக அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் மென் பொருள் மூலம் உலகம் முழுவதும் மனித உரிமை ஆர்வலர்கள், செய்தியாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட 50,000 பேரின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக கடந்த ஆண்டு ஜூலையில் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தியாவில் 40 செய்தியாளர்கள் உட்பட 300 பேரின் ஸ்மார்ட்போன் தகவல்கள் திருடப் பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தின.நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கின. பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த பின்னணியில் அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் நாளிதழ், பெகாசஸ் மென்பொருள் தொடர்பாக கடந்த 28ஆம் திகதி விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது.

அதில், அமெரிக்கா, மெக்ஸிகோ, போலந்து, ஹங்கேரி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலிடம் இருந்து பெகாசஸ் மென்பொருளை வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில் இஸ்ரேலிடம் இருந்து இந்திய அரசு பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கியதாகவும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

“பல ஆண்டுகளாக பாலஸ் தீனத்தின் உரிமைக்காக இந்தியா குரல் கொடுத்தது. இதன் காரணமாக இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பெரிய இடைவெளி இருந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரும் அன் றைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் கடற்கரையில் நின்று உரையாடினர்.

பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின்போது இஸ்ரேலிடம் இருந்து ரூ.15,000 கோடி மதிப்பில் பெகாசஸ் உளவு மென்பொருள், ஏவுகணைகள் வாங்கப்பட்டன. சில மாதங்களுக்குப் பிறகு நெதன்யாகு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது” என்று நியூயோர்க் டைம்ஸ் நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த செய்தியால் இந்தியாவில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. இஸ்ரேலில் இருந்து பெகாசஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா, இதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க வேண்டும் என்று பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத் தியுள்ளனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “மோடி அரசு பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள், அரசியல் தலைவர்கள், பாதுகாப்புப் படைகளின் அதிகாரிகள், அரசு அதிகாரிகளின் ஸ்மார்ட்போன்கள் உளவு பார்க்கப்பட்டன. இது தேசத் துரோகம்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கும் நிலையில் பெகாசஸ் விவகாரம் இரு அவைகளிலும் புயலை கிளப்பும் என்று தெரிகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய பெண்: 19 வயது இளைஞருடன் ஓட்டம்

Pagetamil

இன்ஸ்டா காதலால் விபரீதம்: நீரில் மூழ்கி 3 பேர் பலி!

Pagetamil

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

Leave a Comment