தமிழர் விடுதலைக் கூட்டணியை எனது உயிரைப் பணயமாக வைத்து 50 வருடங்களாக காப்பாற்றி வருகிறேன். தமிழர் விடுதலைக் கூட்டணியென இப்பொழுது சட்டவிரோதமாக கூட்டம் நடத்திய யாராவது தமது கட்சி உறுப்புரிமையை நிரூபிக்க முடியுமா? ஒரு சதம் பணம் கட்சிக்காக கொடுத்துள்ளார்களா? நான் 32 மில்லியன் ரூபாவை கட்சிக்காக செலவிட்டுள்ளேன். தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்டபூர்வமாக செயலாளர் நாயகம் நான்தான். அதில் எந்த மாற்றமும் கிடையாது’ என தெரிவித்துள்ளார் வீ.ஆனந்தசங்கரி.
‘அண்ணன் (நான்) கொரோனாவில் வைத்தியசாலையில் இருக்க, இங்கு இலண்டனிலிருந்து வந்த தம்பி திருவிழா எடுக்கிறார்’ என்றும் தெரிவித்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் உள்கட்சி மோதல் உக்கிரமடைந்துள்ளது.
நேற்று (29) யாழ்ப்பாணத்தில் நடந்த விசேட பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, கட்சியின் ஒரு பகுதியினர் அறிவித்தனர். நிதி விவகாரங்கள் குறித்து ஆனந்தசங்கரியை விசாரணை செய்ய குழுவொன்றும் நியமிக்கப்பட்டதாகவும் அறிவித்தனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் எந்த பொறுப்பிலும் ஆனந்தசங்கரி நியமிக்கப்படாததுடன், கட்சி அலுவலகத்திற்குள்ளும் எதிரணியினர் நுழைய முற்பட்டனர்.
எனினும், கட்சியின் பெயர்ப்பலகைகள் நீக்கப்பட்டு, சட்டத்தரணி வீ.ஆனந்தசங்கரியின் அலுவலகம் என புதிய பெயர்ப்பலகை பொருத்தப்பட்டிருந்தது.
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள புதிய நிலைமை குறித்து வீ.ஆனந்தசங்கரி இன்று (30) தமிழ் பக்கத்திற்கு தெரிவித்த கருத்துக்கள் வருமாறு-