ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவிற்கு நீதி கோரி, அவரது மனைவி சந்தியா தலைமுடியை காணிக்கையாக வழங்கியுள்ளார். பிரகீத் எக்னொலி கொட காணாமல் போய் 12 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நேற்று (25) காலை மோதர காளி கோவிலில் தலைமுடியை காணிக்கையாக வழங்கினார்.
பிரகீத் எக்னலிகொட முன்னைய மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 2010 ஜனவரி 24 அன்று இரவு கொழும்புக்கு அருகிலுள்ள புறநகர்ப் பகுதியில் வைத்து கடத்தப்பட்டார். அவரது மனைவி சந்தியா, தனது கணவருக்கு நீதி கோரி 12 ஆண்டுகளாக போராடி வருகிறார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1