பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்துள்ளார்.
இலங்கை-பாகிஸ்தான் வர்த்தக உடன்படிக்கையின் மூலம் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதை உறுதிசெய்வதற்கு வழக்கமான கலந்துரையாடல்கள் அவசியம் என பிரதமர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
இம்ரான் கான், இரு நாடுகளிலும் உள்ள வணிகங்களுக்கு மேலும் விரிவான வர்த்தக நோக்கத்தை பராமரிக்க வழிகாட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
பௌத்த யாத்திரை தொடர்பான சுற்றுலாவுக்கான வாய்ப்புகளை பாகிஸ்தான் அரசாங்கம் விரிவுபடுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்த அவர், பாகிஸ்தானில் இலங்கை பௌத்த கலாசாரத்தை மேம்படுத்துவதற்கு நம்பிக்கை தெரிவித்தார்.
கல்வி, சுகாதாரம், தொழிநுட்பம், ஆடைகள், சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.