கரந்தெனிய, பிஹிஓயகந்த பிரதேசத்தில் உள்ள பலா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவி மற்றும் இளைஞரொருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
16 வயது மாணவியும் 20 வயது இளைஞனுமே சடலமாக மீட்கப்பட்டனர். அவர்கள் இருவரும் பிஹிஓயகந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
உயிரிழந்த இருவருக்கும் காதல் தொடர்பு இருந்ததாக கரந்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தற்கொலையா என விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
2
+1
+1
+1
+1
2
+1
+1
3