மட்டக்களப்பு கோட்டை முனை விளையாட்டு கிராமத்தினால் பேத்தாழை இளம் தளிர் விளையாட்டு கழத்திற்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கிரிக்கட் கடினப்பந்து விளையாட்டுக்கான ஆடுகள விரிப்பு மற்றும் விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி கழகத்தின் செயலாளர் சி.சிறிகாந் குறித்த பொருட்கள் தேவையென விடுத்த வேண்டுகோளினையடுத்து அப்பொருட்கள் கழகத்தின் தலைவர் ந.நிமலராஜிடம் கையளிக்கப்பட்டது.இப் பொருட்களை புலம்பெயர் நாட்டில் வாழும் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் உறுப்பினர் பே.ரமேஸ்குமாரின் அனுசரனையில் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் இணைப்பு செயலாளர்.சி.அகிலகுமார் அதிதியாகவும் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1