26.3 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

இன்று முதல் 16-19 வயதினருக்கு இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி!

இரண்டாவது ஃபைசர் தடுப்பூசி டோஸ் இன்று முதல் 16 வயது முதல் 19 வயது வரையிலான மாணவர்களுக்கு செலுத்தப்படும்.

பல நாடுகள் நான்கு வாரங்களுக்குப் பிறகு இந்த வயதினருக்கு இரண்டாவது டோஸை வழங்குகின்ற அதே வேளையில், இலங்கையில் தடுப்பூசிகள் தொடர்பான விசேட நிபுணர் குழு மூன்று மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸை வழங்க பரிந்துரைத்ததாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பொது மக்களிடம் ஃபைஸர் பூஸ்டர் தடுப்பூசியை விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஜயசுமண, 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது டோஸைப் பெற்று மூன்று மாதங்களை பூர்த்தி செய்துள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.

கொரோனா வைரஸின் Omicron மாறுபாடு உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அது இலங்கைக்குள் பரவுவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்றும் கூறினார்.

இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டு 6 மாதங்கள் நிறைவடைந்த போதிலும் சில குழுக்கள் பூஸ்டர் தடுப்பூசி பெறவில்லை என்றும், முதல் மற்றும் இரண்டாவது டோஸ் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி இந்த கட்டத்தில் குறைந்திருக்கலாம் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிணற்றில் விழுந்து பச்சிளம் குழந்தை பலி

east tamil

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிகிறது

Pagetamil

மாவைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்களின் படத் தொகுப்பு

east tamil

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நாமல்

Pagetamil

விரைவில் மீண்டும் சிக்கன்குனியா

east tamil

Leave a Comment