28.4 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இந்தியா

திருமண வரவேற்பில் மணமகள் நடனம் ஆடிய விவகாரம்: வரதட்சணை கேட்டதால் மணமகனை மாற்றியதாக பெண் புகார்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுபாளையம் ஊரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் பண்ருட்டியை சேர்ந்த ஜெயசந்தியா என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயம் செய்து திருமணம் நாள் குறிக்கப்பட்டது அதன் பேரில், கடந்த 20ஆம திகதி காடாம்புலியூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது, அப்பொழுது திருமணத்தில் டிஜே நிகழ்ச்சிக்கு பெண் வீட்டார் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் பெண் அழைப்பு முடிந்து திருமண மண்டபத்தில் மணமகள் மற்றும் மணமகள் உறவினர்கள் சினிமா பாடலுக்கு வெகு நேரமாக டிஜே பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்.

அப்பொழுது மணமகள் வீட்டார்கள் மணமகன் மற்றும் மணப்பெண்ணை நடனமாட வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் மணமகன் மற்றும் மணப்பெண் பாடலுக்கு நடனமாடிக்கொண்டு இருந்தபோது உறவினர் ஒருவர் மணப்பெண் மேல் கை வைத்து நடனம் ஆடியதால் ஆத்திரமடைந்த மணமகன் மேடையில் அமர்ந்துள்ளார்.

பின்னர் மணமகன் உடனடியாக மணப்பெண்ணிடம் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இரு குடும்பங்களிடையே மோதல் ஏற்பட்டு திருமண மண்டபத்தில் இருந்து மணமகள் வெளியேறியதாக கூறப்படுகிறது.

பின்னர் மணமகன் மணபெண்ணை அறைத்ததாக கூறி, உடனே மணப்பெண்ணுக்கு முறை மாமனுடன் பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலில் திருமணம் நடைபெற்றது.

பின்னர் மணமகன் ஸ்ரீதர், திருமண நிகழ்வுக்காக தனக்குரூ.7 லட்சம் வரை செலவானதா கவும், அந்த பணத்தை பெற்றுத் தரும்படி ஸ்ரீதர் நேற்று முன் தினம் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதனை தொடர்ந்து நேற்று மணப்பெண் ஜெயசந்தியாவும் புகார் அளித்துள்ளார்.

அதில், “என்னை யாரும் கட்டாயபடுத்தி திருமணம் செய்யவில்லை, எனக்கு திருமணம் செய்ய முடிவு செய்து இருந்த ஶ்ரீதர் என்னிடமும் எனது குடும்பத்தார் இடமும் முன்பு இருந்தே வரதட்சணை கேட்டு வந்ததார், பின்னர் 50 பவுன் நகை போடுவதாக ஒப்புக்கொண்ட பிறகும் கல்யாண மண்டப்பத்திற்கு வந்தவுடன் மேலும் வரதட்சணையாக கார் வேண்டும் என கேட்டு என்னை மண்டபத்தில் வைத்து அடித்தார், இது மட்டும் இன்றி அவர் ஒரு குடிகாரர் மற்றும் ஒரு சைகோ போல் நடந்து கொள்வார்.

ஆகையால் தான் நான் திருமணத்தை நிறுத்தி எனது மாமாவை திருமணம் செய்து கொண்டேன். எங்களது வீட்டார் சார்பில் இதுவரை 5 பவுன் நகை பொட்டுள்ளோம். ஆகையால் அவர் தான் எங்களுக்கு அவர் தான் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மது போதையில் மதகுரு

east tamil

​​காதலியை கொன்று உடலை பதப்படுத்தி வைத்த மருத்துவர்: 3 மாதங்களுக்கு பின்னர் சிக்கியது எப்படி?

Pagetamil

கமலின் மநீம-வில் இருந்து விலகியது ஏன்? – நடிகை வினோதினி விளக்கம்

Pagetamil

இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரி வழக்கு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Pagetamil

இலங்கையின் கடைசி தமிழ் மன்னருக்கு தமிழ்நாட்டில் அஞ்சலி

east tamil

Leave a Comment