29.8 C
Jaffna
March 29, 2024
விளையாட்டு

‘நேர்மையுடன்தான் பணியாற்றினேன்’: இந்திய டெஸ்ட் கப்டன் பதவியிலிருந்தும் விராட் கோலி திடீர் விலகல்

இந்திய டெஸ்ட் அணியின் கப்டன் பதவியிலிருந்து விராட் கோலி திடீரென விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார். என்னுடைய பணியை முழுமையாக நேர்மையாகச்செய்தேன், நான் பதவியிலிருந்து இறங்க சரியான தருணம் என்று கோலி தெரிவித்துள்ளார்

தென்னாபிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில்படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இந்த முடிவை கோலி எடுத்துள்ளார்.

ரி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக, உலகக் கோப்பை முடிந்தபின் கப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்திருந்தார். ஆனால், அதன்பின் ஒருநாள் தொடருக்கான அணிக்கான கப்டன் பதவியிலிருந்து கோலி நீக்கப்பட்டார். இது தொடர்பாக விராட் கோலிக்கும், பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் இடையே பல்வேறு கருத்து மோதல்களும், சொல்லாததை சொன்னதாக இருவரும் மாறி மாறி கூறிவந்தனர்.

பிசிசிஐயுடன் மோதலில் ஈடுபட்டபோதே விராட் கோலியின் டெஸ்ட் கப்டன் பதவியும் பறிக்கப்பட்டிருந்திருக்கும். ஆனால், தென்னாபிரிக்கா பயணம் செல்லும் இந்திய அணியின் தார்மீக மனவலிமை குறைந்துவிடக்கூடாது, அணியின் செயல்பாட்டில் ஏதும் சிக்கல் இருக்கக்கூடாது என்று பிசிசிஐ கருதியதாகத் தகவல்கள் தெரிவித்தன.

அதேசமயம், டெஸ்ட் தொடரை இந்திய இழந்தாலோ, அல்லது கோலியின் செயல்பாட்டில், துடுப்பாட்ட திறமையில் ஏதேனும் விமர்சனங்கள் எழுந்தோ கோலியின் கப்டன்ஷிப் பதவியில் கத்தி விழுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் முன்பு தெரிவித்தன.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வி, மைக்கில் தென்னாபிரி்க்க கிரிக்கெட் வாரியத்தை விமர்சி்த்தது போன்ற கோலியின் செயல்கள் அவரின் பதவிக்கு ஆபத்தாக முடிந்தன.

தோனி கடந்த 2014ஆம் ஆண்டு டெஸ்ட் கப்டன் பதவியிலிருந்து விலகியபின் இந்திய அணியின் டெஸ்ட் கப்டனாக கோலி பதவி ஏற்றார். ஏற்ககுறைய 8 ஆண்டுகள் கப்டன் பதவியில் இருந்த கோலி இந்தியாவிலேயே வெற்றிகரமான கப்டன் என்ற பெருைமயோடு வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை கோலி 68 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை வகித்துள்ளார். இதில் 40 வெற்றிகளையும், 17 தோல்விகளையும் சந்தித்துள்ளது இ்ந்திய அணி,11 போட்டிகளை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

விராட் கோலி ருவிற்றர் தளத்தில் பதிவிட்ட கடிதத்தில் கூறப்பட்டிருப்தாவது:

ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒவ்வொன்றும் நிறுத்தப்பட வேண்டும். என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் அணியின் கப்டன் பதவிக் காலத்தையும் நிறுத்துகிறேன். என்னுடைய கப்டன்ஷி பயணத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் இருந்தன.

ஆனால், ஒருபோதும் என்னுடைய முயற்சியிலும், நம்பிக்கையிலும் தொய்வு வந்தது இல்லை. இந்திய அணியை சரியான திசையில் கொண்டு செல்ல ஒவ்வொரு நாளும் கடினமான உழைப்புடன், இடைவிடாத முயற்சியுடன் 7 ஆண்டுகள் கடினமாக உழைத்தேன். இந்தப் பணியை நான் முழு நேர்மையுடன் செய்தேன், எதையும் விட்டுவிடவில்லை.

ஒவ்வொரு விஷயத்தை நான் செய்யும்போதும் 120 சதவீத உழைப்பை வழங்குவேன் என நான் நம்புகிறேன். ஆனால், என்னால் செய்ய முடியாவிட்டால், அதைச் செய்ய இது சரியான நேரம் இல்லை என எனக்குத் தெரியும். நான் என் மனதில் முழுத் தெளிவுடன் இருக்கிறேன். என்னுடைய அணிக்கு நேர்மையற்றவனாக இல்லை

இந்திய அணியை நீண்டகாலம் வழிநடத்திச் செல்லும், தேசத்துக்கு தலைமை ஏற்கவும் வாய்ப்பளித்த பிசிசிஐக்கும் நன்றி. தொடக்க நாளிலில் இருந்து என்னுடைய நோக்கத்தோடு பயணித்த சகவீரர்களுக்கு நன்றி, எந்த சூழலிலும் யாரையும் கைவிட்டதில்லை. ரவி சாஸ்திரி, எம்எஸ் தோனியின் பங்களிப்பை நான் மறக்க முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த எந்திரம் நகர்ந்து முன்நோக்கி செல்ல ரவி பாய் காரணமாக இருந்தார். என்னுடைய கப்டன்ஷியில் நம்பிக்கை வைத்து, இந்திய அணியை முன்னோக்கி என்னால் கொண்டு செல்ல முடியும் என்று நம்பிக்கை வைத்து செயல்பட்ட தோனி சகோதரருக்கு மிகப்பெரிய நன்றி என கோலி தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குஜராத்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

Pagetamil

தோல்வியின் பிடியில் பங்களாதேஷ்

Pagetamil

இரண்டாவது இன்னிங்ஸிலும் தனஞ்ஜய, காமிந்து சதம்: பங்களாதேஷின் வெற்றியிலக்கு 510

Pagetamil

பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!

Pagetamil

சிஎஸ்கே புதிய கப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

Pagetamil

Leave a Comment