மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் சிஜடி என கூறி கடந்த 5 ஆம் திகதி வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், கணவரை கட்டிவைத்துவிட்டு மனைவியிடமிருந்து பெறுமதியான பொருட்களை அபகரித்து சென்றுள்ளனர்.
காதில் இருந்த தோடுகள், தங்க சங்கிலி உட்பட இரண்டரை பவுண் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கொள்ளையில் ஈடுபட்ட 6 பேர் நேற்று (12) புதன்கிழமை கைது செய்துள்ளதுடன், கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்திய காரையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையடிப்பதற்காக பயன்படுத்திய கோடரி, கத்தி, 3 கையடக்க தொலைபேசிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான விசாரணையில் 2 பேர் கைது சச்யப்பட்டனர். அவர்களிம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில், நேற்று புதன்கிழமை ஓட்டமாவடி, கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள வட்டவான் மற்றும் வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
31,34,29 மற்றும் 31 வயதுடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த காலத்தில் குற்றச் செயல் காரணமாக கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த போது, 4 பேரும் நண்பர்களாகி, சிறையில் இருந்து வெளியில் வந்ததும் கொள்ளையடித்து வருகின்றனர். அதற்காக காரொன்றையும் வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
-எஸ்.கிருஷி-