24.8 C
Jaffna
February 2, 2025
Pagetamil
கிழக்கு

பட்டிப்பளையில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் பல்வேறுபட்ட உதவித்திட்டங்கள் வழங்கிவைப்பு!

சுபீட்சத்தின்பால் நாட்டை கட்டியெலுப்பும் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை வளர்ப்பு, சிறு பொருளாதாரப் பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் முன்மொழிவிற்கு அமைவாக மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக வறிய மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் வீடமைப்பு உள்ளிட்ட பல்வேறுபட்ட உதவி திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் வழங்கப்பட்டுவரும் நிலையில் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மக்களுக்கான பல்வேறுபட்ட உதவித்திட்டங்களை வழங்கும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக பங்கேற்றிருந்ததுடன், உதவித்திட்டங்களுக்கான காசோலைகளையும் வழங்கிவைத்துள்ளார்.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி.தட்செனகௌரி தினேஸ் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான வீடமைப்பு உதவித்திட்டங்கள், மலசல கூடம், மின்சாரம் மற்றும் மைதான புனரமைப்பு போன்றவற்றிற்கான காசோலைகள் இராஜாங்க அமைச்சரினால் இதன்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இந் நிகழ்வில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் வை.சந்திரமோகன், பட்டிப்பளை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முற்போக்கு தமிழர் கழகத்தின் பிரதிநிதிகள், கிராமிய அமைப்புக்கள் மற்றும் விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது வீடு திருத்தம் செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட 4 பயனாளிகளுக்கு மூன்று இலட்சம் பெறுமதியான காசோலைகளும், அதே போன்று சிறியளவிலான வீடு திருத்தத்திற்காக மேலும் 8 பயனாளிகளுக்கு 150,000/= ரூபாய் பெறுமதியான காசோலைகளும், மலசலகூட வசதியற்ற 18 பயனாளிகளுக்காக 70,000/= ரூபாய் வீதம் 1,260,000/= ரூபாய் பெறுமதியான காசோலைகளும் இதன்போது இராஜாங்க அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், மின் இணைப்பு அற்ற வறிய குடும்பங்களிற்கு மின் இணைப்பை பெற்றுக்கொள்வதற்காக 19 பயனாளிகளுக்கு 23,150/= ரூபாய் பெறுமதியான காசோலைகளும், ஒரு விளையாட்டு மைதான புனரமைப்பிற்காக ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகளுமாக மொத்தமாக மீள்குடியேற்ற அமைச்சினால் கிடைக்கப்பெற்றுள்ள 4,649,850/= ரூபாய் பெறுமதியான காசோலைகள் இதன்போது இராஜாங்க அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கம்பளை வீதியில் விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்!

east tamil

வேலூர் இந்து மயானத்தை சீரமைக்க கோரிக்கை

east tamil

கங்குவேலியில் உழவர் தின நிகழ்வு

east tamil

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் செங்கலடி பொது மயான சுத்தம்

east tamil

தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல்

east tamil

Leave a Comment