இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாக ஒப்பந்தத்திற்கு எதிராக எல்லே குணவன்ச தேரர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் கடந்த வாரம் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பாக திறைசேரியின் செயலாளர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார், மற்றைய கையொப்பமிட்டவர்களில் காணி ஆணையாளர் நாயகம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் மற்றும் ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் ஆகியோரும் அடங்குவர்.
தேசிய பிக்கு முன்னணியின் செயலாளர் வாகமுல்லே உதித்த தேரரும் திருகோணமலை எண்ணெய் தாங்கி ஒப்பந்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமா அதிபர், நிதி அமைச்சின் செயலாளர், எரிசக்தி அமைச்சர் உள்ளிட்ட 47 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என உதித்த தேரர் தனது மனுவில் கோரியுள்ளார்.