25 C
Jaffna
February 1, 2025
Pagetamil
கிழக்கு முக்கியச் செய்திகள்

திருகோணமலையில் பயணிகள் பேருந்து- டிப்பர் மோதி விபத்து: 25 பேர் காயம்!

திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி பட்டித்திடல் பகுதியில் லொறி மற்றும் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணித்த 26 பேர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து இன்று (10) காலை இடம்பெற்றுள்ளது.

அம்பாறையிலிருந்து திருகோணமலை நோக்கி வந்துகொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான பேருந்தும், மூதூரிலிருந்து சேருவில நோக்கி சென்று கொண்டிருந்த லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த பேருந்தில் அதிகளவில் அரச உத்தியோகத்தர்களே பயணித்தனர்.  இதுவரைக்கும் 26 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டிப்பர் வாகனத்தின் சாரதியின் கால்கள் உடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

விபத்து தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-பதுர்தீன் சியானா-

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

கிழக்கு மாகாண ஆளுநருடன் கணக்காய்வு அதிகாரிகளின் சிறப்பு கலந்துரையாடல்

east tamil

வாழைச்சேனை வைத்தியசாலையின் முக்கிய மைல் கல் இன்று

east tamil

தோடம்பழம் சாப்பிட்ட ஒன்பது பேருக்கு பாதிப்பு

east tamil

மடத்தடி ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலயம் – வரலாற்றுப் பார்வை

east tamil

திருகோணமலையில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி

east tamil

Leave a Comment