கோழி மற்றும் முட்டை விநியோகத்தை தொடர்ச்சியாக மேற்கொள்வது ஏப்ரல் மாதத்தில் சவாலாக இருக்கும் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை கோழிப்பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர, கால்நடைத் தீவனப் பற்றாக்குறையே விநியோகத்தில் இடையூறு ஏற்படக் காரணம் எனத் தெரிவித்தார்.
டிசம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோழி மற்றும் முட்டைக்கான தேவை அதிகரிப்பதைக் குறிப்பிட்ட அவர், அதிகரித்த தேவைக்கு தாம் தயாராக வேண்டும் என்றும் கூறினார்.
எனவே தற்போது பற்றாக்குறையாக உள்ள கால்நடை தீவனத்தை இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
குணசேகர மேலும் கூறுகையில், கோழியின் விலை ரூ.670-690 வரை பராமரிக்கப்படுகிறது.
25 ஆக இருந்த முட்டையின் விலை தற்போது குறைந்து வருகிறது என்றார்.
அடுத்த வாரம் அரசாங்கத்துடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து கால்நடை தீவனத்தை இறக்குமதி செய்ய முடிந்தால், தேவைக்கு ஏற்ப விநியோகத்தை வழங்க முடியும் என்று குணசேகர கூறினார்.