நாளை (10) முதல் நாளாந்தம் ஓன்று அல்லது இரண்டு மணித்தியாலங்கள் திட்டமிடப்பட்ட மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில், நாளாந்தம் திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.




