24.9 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இலங்கை

கோட்டாவின் ஆட்சிக்காலத்தில் மட்டும் 5.18 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்: சம்பிக்க வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தான் ஜனாதிபதியாக இருந்த இரண்டு வருட காலப்பகுதியில் ஒரு வெளிநாட்டுக் கடன் கூட பெறப்படவில்லை என தெரிவித்தார்.

“எனது 2 வருட பதவிக் காலத்தில் நான் ஒரு சதம் கூட கடனாக வாங்கவில்லை. நாம் ஆண்டுக்கு 6.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த கடன்கள் முந்தைய அரசுகளால் பெற்றவை. இது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவோ அல்லது வேறு எந்த விஷயத்திற்காகவோ இருந்திருக்கலாம், ஆனால் நாம் இப்போது ஒவ்வொரு வருடமும் திருப்பிச் செலுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தற்போதைய அரசாங்கம் வாங்கியதாக கூறப்படும் கடன்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டில் மட்டும் 1,875 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாகப் பெறப்பட்டதாக சம்பிக்க பகிர்ந்துள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021 இல், மொத்தக் கடன்கள் 3,300 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பெறப்பட்டுள்ளது.

இதன்படி, சம்பிக்க ரணவக்க பகிர்ந்துள்ள விவரங்களின்படி, கடந்த இரண்டு வருடங்களில் மொத்தமாக 5.18 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாகப் பெறப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கனேடிய நடுவண் அரசின் பழங்குடி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் – குகதாசன் எம்.பி சந்திப்பு

east tamil

நாளை புதிய சபா நாயகர் தெரிவு

east tamil

தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மகன் தற்கொலை

east tamil

ஜனாதிபதி அனுரகுமார திசா நாயக்க – இந்திய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

east tamil

யாழில் பேருந்து மோதி ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment