அந்தியூரில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனத்துறை அலுவலகம் அருகே உள்ள தனியார் பயிற்சி கல்வி நிலையத்தில் ஆசிரியராக லோகநாதன் (38) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் அந்தியூர் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பில் தோல்வியுற்ற 16 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, கடந்த டிசம்பர் 4ஆம் திகதி பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி 3 மாத கர்ப்பிணியாக இருந்ததையடுத்து, போலீசார் லோகநாதனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட லோகநாதனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என காவல்துறையினர் பரிந்துரை செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி உத்தரவின் பேரில் லோகநாதனை குண்டர் சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.