25.4 C
Jaffna
January 14, 2025
Pagetamil
ஆன்மிகம்

தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு 2022ஆம் ஆண்டுக்கான ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்களை ஜோதிடமணி எஸ்.எம்.பஞ்சாட்சரம் கணித்து வழங்கியுள்ளார்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

01.01.2022 முதல் 30.06.2022 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கை பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெற்றோருடன் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். பெற்றோருக்கும் மருத்துவச் செலவுகள் குறையும். உங்கள் தேக ஆரோக்கியமும் சிறப்பாகவே அமையும். செய்தொழிலில் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்புவீர்கள். உடன் பிறந்தோரிடம் நெருக்கம் அதிகரிக்கும். செய்தொழிலில் பொறுப்புகள் கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் உங்கள் செயல்களுக்கு உந்து சக்தியாகவும் விளங்குவார்கள். உங்கள் நிர்வாகத் திறமை பளிச்சிடும்.

சாதுர்யமான செயல்களின் மூலம் அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்பீர்கள். மேலும் மனதிற்கினிய பயணங்களைச் மேற்கொள்வீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவாக சிந்திப்பீர்கள். சமூகத்தில் உங்கள் பெயர், புகழ் உயரத் தொடங்கும் காலகட்டமிது.

01.07.2022 முதல் 31.12.2022 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் அலட்சியப்படுத்திய உறவினர்கள் சமாதானம் ஆகி மீண்டும் இணக்கமாகப் பழகுவார்கள். அனைவரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். தர்ம காரியங்களிலும் நாட்டம் உண்டாகும். சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். உடல் சோர்வுக்கும், சோம்பேறித்தனத்திற்கும் விடை கொடுப்பீர்கள்.

முன் அனுபவம் இல்லாத விஷயங்களில் ஈடுபட வேண்டாம். அரசாங்கத் தொடர்புகளும் உங்களுக்கு சாதகமாகவே அமையும். உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுத்து “ரிஸ்க்’ எடுத்து செய்யும் செயல்கள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளைத் தேடித் தரும் ஆண்டாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் சிறப்பாக செயலாற்றி மேலதிகாரிகளால் புகழப்படுவீர்கள். விரும்பிய பணி இடமாற்றங்களும் பெறுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளில் உதவி புரிவார்கள். அலுவலக ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பணவரவு நன்றாக இருப்பதால் சேமிப்பு உயரும் ஆண்டாக இது அமைகிறது.

வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் சமநிலையைக் காண்பார்கள். மற்றபடி வியாபாரத்தில் இருந்த சிரமங்கள் மறையும். நண்பர்களும், கூட்டாளிகளும் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். புதியவர்களின் நட்பினால் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறையும்.

விவசாயிகளுக்கு பயிர் விளைச்சலில் இருந்த மந்தநிலை மாறி விளைச்சல் சிறப்பாக அமையும். விவசாயத் தொழிலாளர்களை அரவணைத்துச் செல்லவும். வருமானம் சிறப்பாக இருக்கும். கால்நடைகளாலும் தேவையான லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம் அனுசரித்து நடந்து கொள்வார்கள். மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும் பொழுது எச்சரிக்கையுடன் செயல்படவும். உங்களின் புகழ், கெüரவத்திற்கு எந்தக் குறையும் உண்டாகாது. மாற்றுக் கட்சியினரும் உங்களைப் பாராட்டுவார்கள்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். சமுதாயத்தில் பெயரும், மரியாதையும் உயரும். புதிய ஒப்பந்தங்களைத் திறம்படச் செய்து முடிப்பீர்கள். பணவரவும், வண்டி வாகனச் சேர்க்கையும் உண்டாகும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.

பெண்மணிகள் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலையைக் காண்பார்கள். சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். கணவருடன் ஒற்றுமை சீராக இருக்கும். குடும்பத்தோடு புனிதத் தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

மாணவமணிகள் படிப்பிலும், விளையாட்டிலும் வெற்றிகளைப் பெறுவார்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

**********

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

01.01.2022 முதல் 30.06.2022 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் தடைபட்டிருந்த சுப காரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேவைக்கேற்ப நண்பர்கள் உதவி செய்வார்கள். பணவரவு படிப்படியாக உயரத் தொடங்கும். பொருளாதாரத்தில் உயர்வான நிலையை எட்டி விடுவீர்கள். மனதில் நிம்மதி நிறையும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். உடன்பிறந்தோர் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருப்பீர்கள். ஆகார விஷயங்களில் கடுமையான வரைமுறையைக் கடைப்பிடிப்பீர்கள்.

சமுதாயத்தில் உயர்ந்தவர்களைச் சந்திப்பீர்கள். செய்தொழிலில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் பெரிய லாபம் வரத் தொடங்கும். புதிய பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். பங்கு வர்த்தகம் மூலமாக கணிசமான லாபத்தைப் பெற்று, அதன் மூலம் புதிய அசையாச் சொத்துக்களை வாங்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

01.07.2022 முதல் 31.12.2022 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் செய்தொழிலில் புதிய சாதகமான அனுபவங்களைப் பெறுவீர்கள். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்துப் பழகவும். அதேநேரம் மற்றவர்களைப் பற்றி கருத்துக் கூறுவதைத் தவிர்க்கவும்.

சந்தேக உணர்வுகளைத் தவிர்த்து சரியான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பத்தினரை பரஸ்பரம் புரிந்து கொள்வீர்கள். திடீர் வருமானத்தால் பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். போட்டியாளர்களின் தந்திரங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயலாற்றி வெற்றி பெறுவீர்கள்.

உங்கள் ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். மற்றபடி உங்கள் வழக்குகள் சாதகமான முறையில் தீர்ப்பாகி, உங்கள் நெடுநாளைய மனக்குழப்பம், சஞ்சலங்கள் நீங்கி சுதந்திரக் காற்றை சுவாசிப்பீர்கள் என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களின் பேச்சுக்கு மேலதிகாரிகள் கட்டுப்படுவார்கள். விரும்பிய பதவி உயர்வு தேடிவரும். அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும். கடினமான வேலைகளையும் சுலபமாகச் செய்து முடித்து விடுவீர்கள். அலுவலகப் பயிற்சிகளையும் மேற்கொள்வீர்கள்.

வியாபாரிகள் நல்ல வருமானத்தைக் காண்பார்கள். கூட்டாளிகள் உங்களின் சீரிய முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள். புதிய முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயரத் தொடங்கும்.

விவசாயிகள் வழக்குகளில் சாதகமான திருப்பங்களைக் காண்பார்கள். விளைச்சல் நன்றாக இருக்கும். தக்க நேரத்தில் உரங்களை வாங்கிப் பயன்படுத்துவீர்கள். புதிய நிலங்களை வாங்குவீர்கள். உங்கள் மதிப்பு, அந்தஸ்து உயரும் ஆண்டாக இது அமைகிறது.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடி நிறைவேறும். தொண்டர்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். நீண்ட நாள்களாக இருந்து வந்த செயல்களில் தடை தாமதங்கள் நீங்கும். கட்சியில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும்.

கலைத்துறையினர் அலைச்சல் திரிச்சல் இன்றி சுலபமாகப் பணியாற்றுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். உங்கள் வேலைகளைத் திறம்பட செய்து முடித்து பெயரும், புகழும் அடைவீர்கள். புதிய நட்புகள் கிடைத்து, அதன் மூலம் புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

பெண்மணிகளுக்கு தன்னம்பிக்கை கூடும். உங்களின் உடன்பிறப்புகளும் நல்ல வளம் காண்பார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் வருமானம் சீராக இருக்கும்.

மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உருவாகும். விரும்பிய பாடப்பிரிவில் சேரும் வாய்ப்புகள் கிடைக்கும். புத்தி கூர்மை பளிச்சிடும். கால நேரங்களை நிர்ணயித்துக் கொண்டு படித்தால் மேலும் சிறப்படையலாம்.

பரிகாரம்: துர்க்கை அம்மன் வழிபாடு உகந்தது.

**********

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

01.01.2022 முதல் 30.06.2022 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் திட்டமிட்டு சரியான முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியடைவீர்கள். உங்கள் காரியங்கள் யாவும் வெற்றிகரமாக முடிவடைந்துவிடும். அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். நண்பர்களுடன் உங்கள் நட்பை பலப்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் இறை நம்பிக்கை கூடும். பொருளாதாரம் சீரடையும். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும்.

பெற்றோரின் அபிமானத்தைப் பெறுவீர்கள். உடன்பிறந்தோர் மூலமாக சில நன்மைகளை எதிர்பார்க்கலாம். புதிய கடன்களை வாங்கி, அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் சூழ்நிலையும் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

01.07.2022 முதல் 31.12.2022 வரை உள்ள காலகட்டத்தில் உங்களை அவமதித்தவர்கள் தவறை உணர்ந்து நட்புடன் பழக முற்படுவார்கள். உற்றார் உறவினர்களால் உங்களுக்கும், உங்களால் அவர்களுக்கும் பரஸ்பரம் நன்மை உண்டாகும். உங்களின் ஆழ்ந்த நுண்ணிய அறிவை அனைவரும் பாராட்டுவார்கள். நேர்மையான செயல்களால் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரத் தொடங்கும். அதேநேரம் எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கிக் கொடுக்க வேண்டாம். முன் ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும். அதோடு எவரிடமும் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நிலவிவந்த இறுக்கமான சூழ்நிலைகளிலிருந்து விடுபடுவார்கள். உங்களின் அசாத்தியத் துணிச்சல் உங்கள் வேலைகளில் வெற்றியை தேடித்தரும். மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டும் சூழ்நிலை உருவாகும். பயணங்களால் புதிய அனுபவங்களும், லாபமும் கிடைக்கும். சக ஊழியர்களுடன் வேலைகளைப் பகிர்ந்து கொண்டு, அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள்.

வியாபாரிகள் எதிர்பார்த்த வருமானத்தை அடைவார்கள். உங்களின் புதிய யுக்திகளை கூட்டாளிகள் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த தொய்வுகள் நீங்கி வருமானம் உயரும். வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும்.

விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருந்தாலும் விற்பனை சீராக இருக்காது. பூச்சி மருந்துகளுக்கும் கால்நடைகளுக்கும் அதிகம் செலவு செய்ய நேரிடும். பழைய குத்தகை பாக்கிகளைத் திருப்பி அடைப்பீர்கள். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ள எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும்.

அரசியல்வாதிகள் நினைத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். தொண்டர்களின் அலட்சிய போக்கை பெரிதுபடுத்த வேண்டாம். உங்கள் பெயரும், புகழும் உயரும். உங்கள் எதிரிகளின் பலம் குறையும். எதிர்பார்த்த பதவிகள் உங்களைத் தேடி வரும் ஆண்டாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உங்கள் முயற்சிகள் யாவும் உங்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும். சக கலைஞர்களும், ரசிகர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு தூர தேசப் பயணங்கள் செய்ய வாய்ப்பு உண்டாகும்.

பெண்மணிகள் குடும்பத்தில் இணக்கமான சூழ்நிலையைக் காண்பார்கள். கணவரிடம் எதிர்பார்த்த ஆதரவும் கிடைக்கும். குழந்தைகளுக்கு திடீரென்று செலவு செய்ய நேரிடும். செலவுக்கேற்ற வருமானம் வந்துகொண்டே இருக்கும் ஆண்டாக இது அமையும்.

மாணவமணிகள் அதிகம் உழைத்து படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சிலர் வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று கல்வி பயிலும் யோகத்தையும் பெறுவீர்கள். மனக் குழப்பங்கள் தீர, தீய நண்பர்களைக் கண்டறிந்து விலக்கி விடுங்கள்.

பரிகாரம்: பார்வதி பரமேஸ்வரரை வழிபட்டு வரவும்.

**********

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

01.01.2022 முதல் 30.06.2022 வரை உள்ள காலகட்டத்தில் எடுத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். நல்ல விஷயங்களைச் சிந்தித்து சிறப்பாக காரியமாற்றுவீர்கள்.  வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும். கடுமையாக உழைத்து வருமானத்தைப் பெருக்குவீர்கள்.

உபரி வருமானத்தை நல்லபடியாக முதலீடு செய்வீர்கள். குடும்ப சூழ்நிலையில் அமைதி, சுகம், குடும்பத்தாரிடம் ஒற்றுமையும் காணப்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். சண்டை சச்சரவுகளும் முடிவுக்கு வரும்.

வெளியூர், வெளிநாட்டிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். தேக ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். யோகா, பிராணாயாமம் போன்றவற்றையும் கற்றுக் கொள்வீர்கள்.

01.07.2022 முதல் 31.12.2022 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் உற்சாகம் கரை புரளும். குழந்தைகளின் முன்னேற்றம் உயர்ந்து காணப்படும். சமுதாயத்தில் உயர்ந்த, செல்வாக்குள்ள பதவிகள் கிடைக்கும். வருமானம் சிறப்பாகவே தொடரும். உங்கள் தோற்றத்தில் பொலிவும், நடையில் மிடுக்கும் உண்டாகும்.

செய்தொழிலில் படிப்படியான வளர்ச்சி உண்டாகி, பல விதத்தில் வருமானம் வரக் காண்பீர்கள். புதியவர்களின் நட்பைப் பெற்று, அவர்களின் மூலம் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களின் குறைகளைக் கண்டறிந்து, தயவு தாட்சண்யமின்றி திருத்தி விடுவீர்கள். முக்கிய முடிவுகளைத் தயக்கமின்றி எடுப்பீர்கள். உங்களின் நெடுநாளைய ஆசை ஒன்று இந்த காலகட்டத்தில் பூர்த்தியாகிவிடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகரித்தாலும், அவற்றை திட்டமிட்டுச் செயல்படுத்தி, எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெறுவீர்கள்.

நீங்கள் விரும்பிய பணியிடமாற்றம் உண்டாகும். உங்கள் வேலைகளை சக ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். உங்கள் பணி இலக்கை நிர்ணயம் செய்துகொண்டு உழைக்க வேண்டிய ஆண்டாக இது அமைகிறது.

வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவார்கள். தடைகளைத் தகர்த்தெறிவார்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடிந்தாலும் புதிய முதலீடுகளை அவசரப்பட்டு செய்ய வேண்டாம். முக்கிய முடிவுகளைத் தன்னிச்சையாக எடுக்காமல், கூட்டாளிகளுடன் கலந்தாலோசித்த பிறகே எடுக்கவும்.

விவசாயிகள் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் தகுந்த நேரத்தில் விதைத்து விளைச்சலைப் பெருக்கிக் கொள்ள முற்படுங்கள். சந்தையில் விற்பனை நல்ல முறையிலேயே நடக்கும். கால்நடைகளால் ஓரளவு பலன் கிடைக்கும். பூமி, நிலம் போன்றவற்றை வாங்க முற்படுவீர்கள்.

அரசியல்வாதிகள் ஏற்றமிகு பதவிகளைப் பெறுவீர்கள். உங்களின் எண்ணங்கள் சரியான காலகட்டத்தில் பலனளிக்கும். மக்களின் சரியான தேவைகளுக்கு மட்டுமே பாடுபட்டு நல்ல பெயரெடுப்பீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வருமானம் எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கும். கடினமாக உழைத்து, புதிய தொழில்நுட்பங்களைக் கற்று, வெளிப்படுத்தி நற்பெயரெடுப்பீர்கள். சக கலைஞர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.

பெண்மணிகள் சிறப்பான வருமானத்தால் மகிழ்ச்சி அடைவார்கள். கணவர் குடும்பத்தாரும் உங்களுடன் நேசமுடன் பழகுவார்கள். உங்கள் பேச்சுத் திறமையினால் சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக் கொள்வீர்கள். மாணவமணிகள் கடினமாக உழைத்து படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்களின் அறிவாற்றலும், ஞாபக சக்தியும் பெருகும். பெற்றோர் ஆதரவுடன் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

பரிகாரம்: குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.


மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மீனம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

கும்பம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

மகரம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

தனுசு ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

விருச்சிகம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

Leave a Comment