மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன ஒன்றிணைந்து துண்டுபிரசுரப் பிரச்சார நடவடிக்கை ஒன்றில் இன்று (07) திருகோணமலை நகரில் ஈடுபட்டனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் பொது மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இக்கால கட்டத்தில் ஆட்சியாளர்கள் மாத்திரம் சுகபோகங்களை அனுபவித்து வரும் நிலையில் தற்போதுள்ள பிரதான எதிர்க்கட்சியானது மௌனம் காத்து வரும் நிலையில் நாட்டில் ஒரு மாற்றத்தினை கொண்டுவர வேண்டுமெனில் அனைவரும் மக்கள் விடுதலை முன்னணியுடன் கைகோர்க்க வேண்டும் எனும் கருத்துக்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை இதன் போது பகிர்ந்தளித்தனர்.
குறித்த செயற்பாடுகளில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருன் ஹேமச்சந்திரா மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள் என பலர் பங்கேற்றிருந்தனர்.
–ரவ்பீக் பாயிஸ் –