மொரீஷியஸ் தீவின் விமான நிலைய ஊழியர்கள் விமானக் கழிப்பறையின் குப்பைத்தொட்டியில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர்.
எயார் மொரீஷியஸ் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அந்த ஆண் குழந்தையை ஈன்றெடுத்ததாக நம்பப்படும் மடகாஸ்கரைச் சேர்ந்த 20 வயது யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த விமானம் மடகாஸ்கரிலிருந்து புறப்பட்டு ஜனவரி முதல் திகதி மொரீஷியஸில் தரையிறங்கியது.
வழக்கமான சோதனையின்போது விமான நிலைய அதிகாரிகள் குழந்தையைக் கண்டெடுத்தனர்.
அந்தக் குழந்தை சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
கைது செய்யப்பட்ட பெண் அது தன்னுடைய குழந்தையல்ல என்று முதலில் கூறினார். ஆனால் மருத்துவப் பரிசோதனையில் அவர் அண்மையில் குழந்தையை ஈன்றெடுத்தது தெரியவந்தது.
மருத்துவமனையிலிருந்து வெளியானபின்பு சிசுவைக் கைவிட்டதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்படும்.
அந்தப் பெண் இரண்டு ஆண்டு வேலை அனுமதி அட்டையின்கீழ் மொரீஷியஸிற்கு வந்துள்ளார்.