கிராண்ட்பாஸ் ரந்திய உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் 17 வயது இளைஞன் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த அப்துல் லத்தீப் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ரிக்ரொக் தொடர்பில் ஏற்பட்ட முறுகலே கொலைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் மேலும் இரு நண்பர்களுடன் ரண்டிய உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று கொண்டிருந்த போது அவர்களை பின்தொடர்ந்து வந்த அறிமுகமான ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதேவேளை அப்துல் லத்தீப் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1