29.3 C
Jaffna
March 29, 2024
உலகம் முக்கியச் செய்திகள்

பிரான்ஸில் புதியவகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது: 46 உருமாற்றங்களை கொண்டுள்ளது!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸுக்கும், அதன் உருமாற்றமான ஒமைக்ரோனுக்கும் அஞ்சி வரும் நிலையில், பிரான்ஸில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

ஐஎச்யு- பி.1.640.2 என்ற பெயர் கொண்ட இந்தப் புதிய கொரோனா வைரஸால் இதுவரை 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸுக்கும், ஆபிரிக்க நாடான கமரூனில் உள்ள வைரஸுக்கும் தொடர்பு இருக்கலாம் என பிரான்ஸ் விஞ்ஞானிகள் சந்தேகிக்கிறார்கள்.

இந்தப் புதிய வைரஸ் எவ்வாறு மனிதர்களுக்குத் தொந்தரவு கொடுக்கும், பாதிப்பு எப்படி இருக்கும், பரவுதல், குணங்கள் ஆகியவற்றை உடனடியாகக் கணிக்க முடியாது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஐஎச்யு வைரஸ் தனது உடலமைப்பில் 46 வகையான உருமாற்றங்களைக் கொண்டிருக்கிறது. 30 அமினோ அசிட்களைக் கொண்டுள்ளதாக என்501வை மற்றும் இ484கே உள்ளிட்ட 14 வகை அமினோ அசிட்கள் அதன் ஸ்பைக் புரதத்தில் காணப்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த வைரஸ் இதுவரை வேறு எந்த நாட்டிலும் காணப்படவில்லை. உலக சுகாதார அமைப்பும் இது தொடர்பாக விசாரித்து வருகிறது.

மெட்ஆர்எக்ஸிவ் என்ற மருத்துவ இணையதளத்தின் ஆய்வாளர்கள் கூற்றுப்படி, “இந்தப் புதிய வைரஸ் கடந்த நவம்பர் மாதமே ஒரு இளைஞர் உடலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் புதிய வைரஸ் உருவாகிக் கொண்டேதான் இருக்கும்.

அதற்காக அனைத்து வைரஸ்களும் ஆபத்தானவை என்ற அர்த்தமில்லை. உண்மையான கொரோனா வைரஸைவிட உருமாறி இருப்பதால், இந்த வகை வைரஸ்கள் பன்மடங்கு தன்னைப் பிரதியெடுக்கும் வேகம்தான் ஆபத்தானது. அதாவது ஒமைக்ரோன் வைரஸைப் போல் ஆபத்தானது. ஒமைக்ரோன் வைரஸ் வேகமாகப் பரவக்கூடியது, நோய் எதிர்ப்பு சக்தியை அழித்துவிடக்கூடியது. இதில் எந்தப் பிரிவில் புதிய வகை வைரஸ் வரப்போகிறது எனப் பார்க்கலாம்” எனத் தெரிவிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

Leave a Comment