இலங்கைக்கு கடத்தப்படவிருந்த மஞ்சள் பறிமுதல்!

Date:

இலங்கைக்கு இரவில் கடத்துவதற்காக மண்டபம் அருகே வீட்டில் பதுக்கியிருந்த 875 கிலோ மஞ்சளை பொலிஸார் நேற்று (2) பறிமுதல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த மஞ்சள் மூடைகள் பதுக்கி வைத்திருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி, வேதாளை தென் கடற்கரை பகுதியில் கியூ பிரிவு, மண்டபம் போலீசார் துரித சோதனை நடத்தினர்.

அங்கு ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த தலா 35 கிலோ வீதம் 25 மூடைகளில் 875 கிலோ மஞ்சள் இருந்தது தெரிந்தது.

மஞ்சள் மூடைகளை பறிமுதல் செய்து மண்டபம் காவல் நிலைத்திற்கு கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக முகமது அலி ஜின்னா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

குட்டிமணி, தங்கதுரை சிலை விவகாரம் – சதீஸிடம் 3 மணி நேரம் விசாரணை!

வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஸிடம் பயங்கரவாத தடுப்பு...

நவம்பர் 09 இல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒரு நாள் சுகயீன விடுமுறை போராட்டம்-

கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கமானது (EPDOTU), ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்...

காட்டு யானை தாக்கியதில் இராணுவ சார்ஜென்ட் உயிரிழப்பு

அம்பாறை புறநகர்  பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்