ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 5000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 666,480 ஓய்வூதியர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக மாதாந்தம் 5,000 ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் முதல் சமுர்த்தி பெறுவோரின் 3,500 மாதாந்த கொடுப்பனவுக்கு 1000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ax
நிதியமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான வரிகளை நீக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியும் பிரதமரும் மக்களின் துயரங்களை நன்கு புரிந்து கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் துறை ஊழியர்களுக்கு மேலதிகமாக பணம் வழங்குவது தொடர்பில் தொழில் வழங்குனர்களுடன் கலந்துரையாடுமாறு தொழில் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.