அமெரிக்காவின் கொலராடோவில் கடுமையான காட்டுத் தீயால் சுமார் 1,000 வீடுகள் தீயில் கருகின. இதில், 7 பேர் காயமடைந்தனர். மேலும் மூவரைக் காணவில்லை.
வீதியெங்கும் புகை மூட்டம். மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்று நெருப்புக்குத் தூபமிட்டது.
குறுகிய கால அவகாசத்தில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேற நேர்ந்தது.
கடுமையாக வறண்டு கிடந்த நிலப்பரப்பை நெருப்பு வேகமாய் விழுங்கியது.
அக்கம்பக்க வட்டாரங்கள் சில சாம்பலாயின.
காட்டுத் தீ எப்படித் தொடங்கியது என்று அறிய அதிகாரிகள் புலனாய்வு செய்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1