பண்டாரகம, கெஸ்பேவ வீதியில் வெல்மில்ல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் காதல் ஜோடியொன்று உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம, வல்கம பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனும், கண்டியைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியுமே உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இருவரும் கெஸ்பேவயில் இருந்து பண்டாரகம நோக்கி சென்று கொண்டிருந்த போது வெல்மில்ல சந்தியை கடக்கும் போது மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
1
+1
1