சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி புத்தாண்டைக் கொண்டாடுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
கொழும்பில் உள்ள சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத், பொதுமக்கள் மூடிய இடங்களைத் தவிர்க்க வேண்டும் மற்றும் மூடப்பட்ட பகுதிகளில் நடத்தப்படும் கூட்டங்கள் மற்றும் விருந்துகளில் கலந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
COVID-19 தொற்றுநோய்களின் போது, இலங்கையர்கள் இரண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டையும், 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதியையும் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடித்து கொண்டாடியதாக ஹேமந்த ஹேரத் கூறினார்.
கோவிட்-19 பரவலைக் கையாள்வதில் பொதுமக்களுக்கு அனுபவம் உள்ளதாகவும், சிறப்பு நிகழ்வுகளுக்காக நிகழ்வுகள் மற்றும் விருந்துகளை நடத்தும் அனுபவம் இருப்பதாகவும் கூறினார்.
எனவே, விருந்துகள் மற்றும் பிற கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் போது போதிய இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
அடுத்த இரண்டு வாரங்களுக்கான திருத்தப்பட்ட COVID-19 வழிகாட்டுதல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.