26.8 C
Jaffna
December 14, 2024
Pagetamil
இலங்கை

இலங்கையின் மொத்த கடனையும் அடைக்க தயாராகிய வவுனியா இளைஞன்: என்ன செய்கிறார் தெரியுமா?

‘இலங்கையின் மொத்த கடனையும் அடைக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் ஐநா சபை அதை அனுமதிக்குமா?’- இப்படி சம்மந்தமே இல்லாத இரண்டு வசனங்களை எழுதிய சுலோக அட்டையை தாங்கியபடி, வவுனியாவில் கடந்த 29ஆம் திகதி ஒரு இளைஞன் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

அந்த இளைஞன் இலங்கையின் கடனை அடைப்பதற்கும், ஐநா சபைக்கம் என்ன சம்பந்தம் என்ற கேள்வியை எழுப்பி, இளைஞனை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள்.

ஓவர் நைட்டில் ஒபாமா ஆகுவதற்கு யாரோ வில்லங்க யோசனை சொல்லிக் கொடுக்க, அந்த இளைஞன் ஆர்வக் கோளாறில் ‘ஏதோ’ செய்துவிட்டார் என்றுதான் தோன்றுகிறது.

இந்த ஆர்வக்கோளாறு இளைஞன், நேற்று முன்தினம வவுனியா நகர மணிக்கூபுர சந்தியில், சுலோக அட்டையுடன் நின்றார்.

‘இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். இதை ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா?, எங்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றுமா? இதற்கு மக்கள் நாம் ஒன்றுபடுவோம் ‘ என அதில் எழுதியிருந்தது.

கூடவே, இலங்கை தேசியக்கொடியையும் ஏந்தியிருந்தார்.

இளைஞனை சிலர் வேடிக்கையாகவும், சிலர் பரிதாபமாகவும் பார்த்ததால், மணிக்கூட்டு கோபுர சந்தியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து, இளைஞனை அங்கிருந்து பொலிசார் அகற்றினர்.

பின்னர், பழைய பேருந்து நிலையம் முன்பாக சென்று சிறிது நேரம் சுலோக அட்டையை பிடித்துக் கொண்டு நின்று விட்டு, தனது தொழிலுக்கு சென்று விட்டார்.

யார் இந்த இளைஞன்?

இலங்கை மீள முடியாத கடனில் சிக்கி வருகிறது, சீனாவின் கடன்பொறியில் சிக்கி வருகிறது என பல  எச்சரிக்கைகளை இந்த நாட்களில் கேட்டிருப்பீர்கள். அரசாங்கமே கடனை செலுத்த முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கையில். தனியொருவனாக கடனை செலுத்த தயாரென அறிவித்த இந்த வவுனியா இளைஞன் யார் என்ற ஆர்வ மிகுதியான கேள்வி உங்களிற்கு வரும்.

நேற்று முன்தினம் சுலோக அட்டையுடன் நின்ற பின்னர், உடனடியாகவே அவர் ‘இலங்கையின் கடனை அடைக்க’ தீவிரமாக உழைக்க ஆரம்பித்து விட்டார்.

வவுனியா, கொமர்ஷல் வங்கிக்கு அருகில் செருப்பு தைத்து வருகிறார் அந்த இளைஞன்.

செருப்பு தைத்து நாட்டின் கடனை அடைக்க தயாராகிய இளைஞனை பாராட்டத்தானே செய்ய வேண்டும்.

What’s your Reaction?
+1
0
+1
4
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தொடரும் சுற்றிவளைப்பு – வீழ்ச்சியடைந்த அரிசி விலை!

Pagetamil

‘சிலர் படித்தவர்கள்தான். ஆனால், புத்தி….’: அர்ச்சுனாவை பற்றி நாடாளுமன்றத்தில் போட்டுடைத்த எதிர்க்கட்சி எம்.பிக்கள்!

Pagetamil

அரசாங்கத்தை தர்மசங்கடப்படுத்த சில குழுக்கள் முயற்சி!

Pagetamil

நாடளுமன்றத்துக்குள்ளும் தொடரும் அர்ச்சுனாவின் பரபரப்பு வித்தை: அநாகரிகமாக நடந்ததாக சபாநாயகரிடம் முறைப்பாடு!

Pagetamil

23 இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment